இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிகராலயத்தின் கவுன்சிலர் மட்டக்களப்புக்கு விஜயம்
இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிகராலயத்தின் கவுன்சிலர் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது இன்றையதினம்(22.02.2024) கனேடிய உயஸ்தானிகராலயத்தின் கவுன்சிலர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடா - மட்டக்களப்பு நட்புறவு பண்ணை
மேலும் குறித்த குழுவினர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கனடா - மட்டக்களப்பு நட்புறவு பண்ணைக்கு சென்று கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிக ராலயத்தின் கவுன்சிலர் டனியேல் பூட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஜெ.முரளிதரன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வர் தியாகராஜ சரவணபவன், புலம்பெயர் கனடிய அமைப்பின் உறுப்பினர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து ந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |