முகப்புத்தக களியாட்டம்: போதைப்பொருளுடன் 30 பேர் கைது
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் முகப்புத்தக (பேஸ்புக்) களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கேரளா கஞ்சா 6 கிராம் 90 மில்லி கிராம், 12 போதைப்பொருள் மாத்திரைகள், குஷ் போதைப்பொருள் 1380 மில்லி கிராம், ஐஸ் போதைப்பொருள் 400 மில்லி கிராம், கொக்கைன் போதைப்பொருள் 150 மில்லி கிராம் உட்பட பல்வேறு வகைப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் வெளிப்பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (20) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam