இந்தியாவில் தரையிறங்கிய F 35 விமானம் - செம்மணி விவகாரத்தில் இந்தியாவின் முடிவு!
இந்தியா தன்னை பெரிய ஜனநாயக நாடு என்று கூறுகின்றது. ஆனால் அதன் பக்கத்து நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றத்தை தட்டிக்கேட்க முடியவில்லை என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''இலங்கையில் கால் பதிப்பதற்கு தற்போது பல நாடுகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல்,இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இந்தியா ஏனைய நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை நோக்கி மேற்கொள்கின்ற நகர்வுகளை சீனா கவனித்துக்கொண்டு இருக்கிறது.
இருப்பினும் சீனாவின் படைத்துறை, புலனாய்வு மற்றும் தொழிநுட்ப ரீதியான வளர்ச்சியால் ஏற்கனவே இலங்கையில் கால் பதித்துவிட்டது.
இந்நிலையில், இந்தியா தன்னை தானே ஒரு ஜனநாயக நாடாக சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதன் பக்கத்து நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றத்தை தட்டிக்கேட்க முடியவில்லை.''என கூறினார்.
