பாடசாலை பாடத்திட்டத்தில் தீவிரவாத சித்தாந்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன - கல்வி அமைச்சர்
பொதுபலசேனா அமைப்பை தடை செய்வது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று அரசாங்கம் நம்பவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்துவது கடினம் என்று அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பொதுபலசேனா தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பரிந்துரைகளை செயல்படுத்துவது கடினம்.
இது தொடர்பாக அரசாங்கத்திற்கு சில துணிபுகள் உள்ளன. எனினும் அதனுடன் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உடன்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள ஏனைய பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கருதுவதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைப் பாடத்திட்டத்தில் தீவிரவாத சித்தாந்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை அகற்றப்பட வேண்டும் என்பது உட்பட்ட பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த கல்வி அமைச்சகம் தயாராவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பரிந்துரைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
