கொழும்பில் நேற்றிரவு நடந்த போராட்டத்தின் பின்னணி என்ன? ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாத குழுவும் ஊடுருவ வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வன்முறையாளர் குழுவொன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வன்முறை நிலைமையை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல், ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் திட்டமிட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டில் அரபுக் காடுகளை உருவாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
