கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் கப்பலில் ஏற்பட்ட தீயின் காரணமாக ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மீன்கள், ஆமைகள் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர்ப்புற மேம்பாடு, கடலோர பாதுகாப்பு, கழிவு அகற்றல் மற்றும் பொது சுகாதார அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவ தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் இதுபோன்ற அதிக உயிர் இழப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
கடல் மாசுபாட்டின் விளைவாக தடுக்க முடியாத இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை கொழும்புக்கு வருவதற்கு முன்னர் இரண்டு துறைமுகங்களில் இந்த
கப்பலுக்கு நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்ட தகவலை அமைச்சர் நிராகரித்துள்ளார்.