வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு தாக்குதல்: அத்தனகல்ல நீதவான் பிறப்பித்த உத்தரவு
பலபோவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி பலபோவ பிரதேசத்தில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை வாளால் தாக்கி பலத்த காயப்படுத்தி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், சந்தேக நபரை வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
நீண்ட நாள் தகராறு ஒன்றின் அடிப்படையிலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கை பரிசீலனை செய்த அத்தனகல்ல நீதிமன்ற நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
