தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் நீடிப்பு
பாதுகாப்பு நிமித்தம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வசமுள்ள துப்பாக்கிகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால எல்லையை நீடிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் கடந்த செப்டெம்பர் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், அவை இன்றையதினம்(31.1.2025)நிறைவடையவிருந்தது.
எனினும், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, துப்பாக்கி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உரிய நடைமுறை
இதன்படி, துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் 2026 ஜனவரி 31 ஆம் திகதிவரை ஒரு மாத காலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தங்களது துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri