மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு : மக்களே அவதானம்
பதுளை, கொழும்பு, காலி, கேகாலை, களுத்துறை, மாத்தளை, குருணாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை இன்றையதினமும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இராஜாங்கனை, தெதுருஓயா, லக்ஷபான, மஹவிலச்சி, தப்போவ, பொல்கொல்ல, கொத்மலை, விக்டோரியா, நோட்டன் பிரிட்ஜ், அங்கமுவ மற்றும் துருவில ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் உயர்வடையும் பட்சத்தில் அத்தனகல்ல, கம்பஹா மற்றும் ஜாஎல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்..
அடுத்த சில மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள அபாயம்: சிவப்பு எச்சரிக்கை
தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடமேற்கில் நகரும் சாத்தியம்
புத்தளம் நகரிலிருந்து கொழும்பு வரையான வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு




