நீடிக்கப்பட்ட தடை தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பராட்டே சட்ட நடைமுறை தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பராட்டே சட்ட நடைமுறை தடை, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை
அதன்படி, 2025 மார்ச் 31க்கு முன்னர் சலுகை தொடர்பில் கலந்துரையாடிய 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனை பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 25 மில்லியன் முதல் 50 மில்லியனுக்கும் இடையில் கடன் பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 50 மில்லியனுக்கும் அதிகளவான கடனை பெற்றுவர்களுக்கு 2025 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
