தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு (Photos)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 12 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 14ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் அத்துமீறி தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மூன்று படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
அந்த கடற்தொழிலாளர்கள் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குறித்த வழக்கு மீளவும் இன்று நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 12 தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியலையும் நவம்பர் 8ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இனவாத நடவடிக்கைக்கு துணைபோகாமல் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: அரசியல்வாதிகளுக்கும் ரணில் அழைப்பு
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri