இலங்கையிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை நீடிப்பு! ஐக்கிய அமீரகம் அறிவிப்பு
கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளின் விமானங்களுக்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் அவசரநிலை மேலாண்மை ஆணையம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், லைபீரியா, நமிபியா, சியாரா லியோன், காங்கோ, உகாண்டா ஜாம்பியா, வியட்நாம், பங்ளாதேஷ், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சரக்கு விமானம், தொழில் மற்றும் வாடகை விமானம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதியில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமான சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்திருந்தது.
அத்துடன், கடந்த 19ம் திகதி முதல் ஜூன் 27ம் திகதி வரையில், இலங்கை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த 14 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri