இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளின் பொறுப்பில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பில் இருந்து 2020 அக்டோபரில் வரையறுக்கப்பட்ட சஹஸ்யா முதலீட்டு நிறுவனத்தின் பொறுப்புக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பதற்கு சஹஸ்யா மூலம் பொது - தனியார் கூட்டாண்மையை (பிபிபி) செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி அதிகாரசபைக்கு வழங்கப்பட்ட சராசரி வருடாந்த மூலதனம் மற்றும் தொடர்ச்சியான மானியம் 106 பில்லியன் ரூபாய்களாகும்.
எனினும் நெடுஞ்சாலைகளில் இருந்து ஆண்டுக்கு 7 பில்லியன் ரூபாய் வருமானம் மாத்திரமே கிடைத்துள்ளது.
இந்தநிலையில் விரைவுச் சாலைகளில் இருந்து வரும் இந்த அற்ப வருமானத்தை தவிர வீதி அதிகார சபை, முழுமையாக வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளிலேயே தங்கியுள்ளது.
எனவே இதனை மாற்றி, நெடுஞ்சாலைகளின் வருமானத்தில் இருந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையை நிர்வகிக்கும் திட்டத்துக்காகவே அதனை, சஹஸ்யா முதலீட்டு நிறுவனத்தின் பொறுப்பில் கையளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
