விரைவில் திறக்கப்படவுள்ள துறைமுக நகருக்கான அதிவேகப் பாதை
கொழும்பு துறைமுக நகருக்கான (போர்ட் சிட்டி) அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஒக்டோபரில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்துடன் நேரடியாக இணைக்கும் தூண்கள் மீதான அதிவிரைவு துறைமுக பிரவேச நெடுஞ்சாலை (PAEH) திட்டத்தின் பணிகள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபரில் குறித்த அதிவேகப் பாதை செயற்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
சர்வதேச துறைமுகத்திற்கான இணைப்பு
குறித்த நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் 85% க்கும் அதிகமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலை கொழும்பில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கவும், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பிலிருந்து கொழும்பில் உள்ள சர்வதேச துறைமுகத்திற்கான இணைப்பை மேம்படுத்தவும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam