பளை இத்தாவில் பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு
யாழ்.பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் பச்சை நிற சீருடை துணி ஒன்றினை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இடத்தில் வீட்டு உரிமையாளரால் தோண்டப்பட்ட போது வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

ம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிபடையினர் தோண்டப்பட்ட குழியினுள் இருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டெடுத்துள்ளனர்.இதில் 02 கைக்குண்டுகள் மற்றும் 175தோட்டா ரவைகள் 01மகசின் என்பன மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிப்பொருட்கள் யுத்த காலத்தில் பயன்படுத்தியது எனவும் அவை செயலிழந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri