முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் வெடிபொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் தனியார் ஒருவரின் காணி ஒன்றிலிருந்து இன்று வெடிபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நிலத்தினை விவசாய நடவடிக்கைக்காக பண்படுத்தும் போது நிலத்தில் இருந்து சில வெடிபொருட்களை உரிமையாளர்களால் இனங்காணப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, துப்பாக்கி ரவைகள், கனரக துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், வெடிபொருட்கள் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோப்பாப்பிலவு பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து மிதிவெடி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனையும் பொலிஸார் மீட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






