கட்டார் - சவுதி அரேபியாவில் வெடிப்புச் சத்தம்.. அடுத்தக்கட்டத்திற்கு நகரும் போர்பதற்றம்
புதிய இணைப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்துள்ள நிலையில், குறித்த தாக்குதல்களில் அபுதாபியில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட பின்னர் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இந்த தாக்குதல் தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. "இந்த தீவிரத்திற்கு பதிலளிக்கும் முழு உரிமையும் அதற்கு உள்ளது" என்று அது மேலும் கூறியது.
முதலாம் இணைப்பு
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தி மத்திய கிழக்கை ஒரு புதிய மோதலில் ஆழ்த்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியிலும், கட்டாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
இதற்கிடையில், கட்டார் தனது வான்வெளியை மூடியுள்ளதால் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சரமாரி தாக்குதல்
மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரானிய இராணும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், அபுதாபி, துபாய், கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளம், குவைத்தில் உள்ள அல்-சேலம் விமானத் தளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-தஃப்ரா விமானத் தளம், பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது அமெரிக்கத் தளம் உள்ளிட்ட தளங்களில் தாக்கியுள்ளதாக ஈரானிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சவுதி அரேபியாவின் ரியாத், பஹ்ரைனின் மனாமாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam