கொழும்பு துறைமுகத்தில் இரசாய பொருட்களுடன் வந்த கப்பலில் வெடிப்பு சம்பவம்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பர்ஸ் கப்பலில் பரவிய தீயை அடுத்த கப்பலில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் இருந்த ஏனையோர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரசாயன பொருட்களை கொண்டு சென்ற இந்த கப்பலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீ பரவியிருந்தது.
இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கடற்படை, விமானப்படை, இலங்கை துறைமுக அதிகார சபை ஆகிய இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையிலேயே, கப்பலில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இருவரும் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் காணப்பட்ட 08 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.