முள்ளிபாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு: அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்
யாழ்ப்பாணம் - முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கிச் செல்லும் புலோலி- கச்சாய் வீதியிலேயே இவ்வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கிப் பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில் இருந்து வடமராட்சி நோக்கி பயணம் செய்பவர்கள் இப்பாதையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வீதி புனரமைப்பு செய்யப்பட்டு ஒரு வருடமே ஆகின்ற நிலையில் முள்ளி ஐய்யங்கண்டி மயானத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்துக்கு அருகாமையிலேயே வெடிப்பு ஏற்பட்டு வீதி கீழ் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் தற்காலிகமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதனூடாக ஒரு வழிப் பயணத்தையே மேற்கொள்ள முடிகிறது.
அதனூடாக பாரவூர்திகள் தொடர்ந்தும் பயணிப்பதால் முற்றான பயணத்தடை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் ஆபத்தான பயணமாக அமைந்து காணப்படுகிறது.
எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாகப் பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
