தமிழ் பாடசாலையில் வெடித்து சிதறிய மர்மப் பொருள்: மூன்று மாணவர்கள் காயம்
கண்டி - கம்பளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை கல்வி வலய மாவத்துர, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் பாடாசாலை மைதானத்திலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாடசாலை நேரத்தில், மேற்படி மூன்று மாணவர்களும் வெளியே வந்த போது பந்து போன்ற ஒன்று கிடந்துள்ளது. அதனை ஒருவர் உதைத்தைப்போது அந்த பொருள் திடீரென வெடித்துள்ளது.
இதன்போது உதைத்த மாணவனின் பாதணி சேதமடைந்ததோடு அவரின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது, .
விபத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
