கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு சம்பவம்: நால்வர் படுகாயம்
கல்முனையில் மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் கடலோரம் அமைந்துள்ள மீன் களஞ்சிய வாடியில் நேற்று(26.6.2026) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பழுதடைந்திருந்த எரிவாயு நிரப்பு நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக வருகை தந்தவர்களே இவ்வனர்த்தத்தில் சிக்கி கொண்டதுடன் சிறு வெடிப்பு காரணமாக அந்த இடத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்:நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கூட்டாகப் பிரேரணை
மேலதிக விசாரணை
தற்போது படுகாயமடைந்த நால்வரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.