இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட பயங்கர வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு 38 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள நிக்கல் தொழிற்சாலையிலேயே இன்று (24.12.2023) அதிகாலை குறித்த வெடிவிபத்து ஏற்ப்பட்டுள்ளது.
வெடி விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தனியார் தொழிற்சாலை வளாகம் ஒன்றில் நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை ஒன்றும் செயல்பட்டு வந்ததுள்ளது.

இந் நிக்கல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் சிலர் புகைப்போக்கிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த புகை போக்கிகளிலும் வெடி விபத்து நிகழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
எனினும் தீயில் சிக்குண்டு 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு 38க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்த 13 பேரில் 7 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். 6 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையாக தெரிய வராத நிலையில், தூய்மை பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தால் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri