இடமாற்றம் வழங்கப்படாத உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் இடமாற்றம் வழங்கப்படாத உத்தியோகத்தர்களின் பணி இடமாற்றம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர்கள் 10 வருடங்களைத் தாண்டியும், அதே பிரதேசங்களில் கடமையாற்றுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் இன்று அரச அதிபரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இடமாற்றங்கள் தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக உரிய காலப்பகுதியை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் பணியிட மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது சரியான தகவல்களை வழங்காத பட்சத்தில் இடமாற்றங்கள் சில வேளைகளில் பின் செல்ல வாய்ப்பு உள்ளது.
ஆகவே இடமாற்றங்கள் உரிய காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். சில தவறுகள்
இருக்கத்தான் செய்கின்ற நிலையில் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை
எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam