அங்கவீனமுற்ற இராணுவ வீரரைத் தாக்கிய பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
ராகம ரணவிரு செவனவில் சிகிச்சை பெறும் ஊனமுற்ற இராணுவ வீரரைத் தாக்கி அவரது பாதிக்கப்பட்ட காலுக்கு தீங்கு விளைவித்ததாக கூறப்படும் பண்டாரகம பிரதேச சபை உறுப்பினரை ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பானந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி இரவு குறித்த அங்கவீனமமுற்ற இராணுவ வீரர் தனது சகோதரர் வரும் வரை பண்டாரகம ரைகம வீதிக்கருகில் இருந்த போது இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக பண்டாரகம குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கவீனமுற்ற இராணுவவீரர் சிறு காயங்களுக்கு உள்ளாகி தற்போது பானந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri