காலாவதியான கோவிட் தடுப்பூசிகள் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
காலாவதியான கோவிட் தடுப்பூசிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகவில்லை என்பதனை தொழில்நுட்ப ரீதியில் பொறுப்புடன் கூற முடியும் என கோவிட் ஒழிப்பு ராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
கலாவதியான அல்லது காலாவதியாக அண்மித்த கோவிட் தடுப்பூசிகள் எவையும் மக்களுக்கு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 39 வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல குறைந்தபட்சம் 70 வீதமானவர்களுக்கு பூரணமாக தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



