அமெரிக்காவுக்கு இலங்கை தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

Human rights Terrorism Prohibition Act United States Congress Ambika Satgunanathan
By Ajith Oct 27, 2021 01:20 PM GMT
Report

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித உரிமைகள் மீது அதன் தாக்கம் குறித்து அமெரிக்க காங்கிரஸூக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் விவாதித்தது.

இதன்போது, இலங்கை தொடர்பில், குழுவின் அங்கத்தவர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் விளக்கமளிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன் (Ambika Satgunanathan) அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் ஆணைக்குழுவில் விளக்கமளித்த அவர், வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு எதிராகவும், 2019 ஏப்ரலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை, நீதிபதி ஒருவர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படாமல், தன்னிச்சையாக கைது செய்து 18 மாதங்கள் வரை காவலில் வைக்கமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம், தன்னிச்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை விளக்கிய அவர், விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அல்லது நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்படுவதில்லை.

மாறாக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரின் பணப் பரிமாற்றத்தைச் வெஸ்டர்ன் யூனியனில் செயலாக்கியவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உந்துருளியை விற்பனை செய்தவர் போன்றோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர் என்று அம்பிகா சத்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து, அரபு மொழியில் புத்தகங்கள் அல்லது அல்லாஹ்வைப் புகழ்ந்து பேசும் அரேபியப் பாடல்கள் வைத்திருந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

PTA என்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழு் கைது செய்யப்படும் போது உரிய நடைமுறைகள் எப்போதும் மீறப்படுகின்றன.

விசாரணையின் போது ஒரு உதவிக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரியிடம் அளிக்கப்பட்ட வாக்கு மூலத்தை ஆதாரமாக ஒப்புக்கொள்ளவும் இந்தச்சட்டம் அனுமதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, வாக்கு மூலம் பெறுவதற்காக அழைக்கப்படுவோர் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.

இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறைச்சாலைகள் பற்றிய ஆய்வின் படி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 84% ஆண்கள், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறியதாகவும், சித்திரவதைக்கு ஆளானவர்களில் 90% பேர் தாங்கள் கையொப்பமிடப்பட்டதாகக் கூறியதாகவும் சத்குணநாதன் அமரிக்க காங்கிரஸ் அமர்வின் போது தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய 95% ஆண்கள், தாங்கள் கையொப்பமிட்ட ஆவணம் தங்களுக்குத் தெரியாத சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பில் தமக்கு விளக்கப்படவில்லை என்றும் தொிவித்திருந்தனர்.

PTA என்ற பயங்கரவாதச்சட்டம், பாதுகாப்பு அமைச்சருக்கு 18 மாதங்கள் வரை கட்டுப்பாடு உத்தரவுகளை வழங்க அனுமதிக்கிறது.

மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ, நிகழ்வுகளில் பேசுவதையோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்குவதையோ தடுக்க கட்டுப்பாடு ஆணைகள் பயன்படுத்தப்படலாம்.

இத்தகைய உத்தரவுகள், வெளிப்படைத்தன்மை அல்லது பொறுப்புக்கூறல் இல்லாமல் தன்னிச்சையாக அமைச்சரால் அனுமதிக்கின்றன.

ஒருவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட பின்னரும் கூட, ஒருவரின் தடுப்புக்காவல் இடத்தைத் தீர்மானிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை இந்தச்சட்டம் அனுமதிக்கிறது.

இதற்கிடையில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யப்படுவதை தடுக்கும் வகையில், குறிப்பாக தமிழ் பெரும்பான்மையான வடக்கு மற்றும் கிழக்கில் கருத்து வேறுபாடு, ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை அச்சுறுத்துவதற்கும் மற்றும் ஒடுக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக சத்குணநாதன், அமெரிக்க காங்கிரஸின் மனித உாிமைகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US