நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கர்தினாலுக்கு விளக்கம் அளிக்கப்படும் - பிரதமர்
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு விளக்கம் அளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் கர்தினாலை சந்திக்க உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நோக்கமின்றி நாடு தொடர்பில் மெய்யான உணர்வுடன் செய்யப்படும் விமர்சனங்கள் குறித்து ஆராயப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால் அதனை திருத்திக்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் நாடு குறித்த உணர்வுடன் செய்யும் ஆலோசனை வழிகாட்டல்களை இந்த அரசாங்கம் உதாசீனம் செய்யாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் அண்மையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri