தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துப் பொருட்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
காலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு கல்முனை நீதவான் நீதிமன்று அபராதம் விதித்துள்ளது.
கல்முனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த வைத்திசாலையில் பாவனைக்கு வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்களை கைப்பற்றியதுடன் வைத்தியசாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அபராதம்
இதற்கமைய குறித்த வழக்கானது நேற்று(12.3.2026) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றத்தை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு நீதிமன்றத்தினால் 100,000/= ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகிய புலனாய்வு உத்தியோகத்தர் இஷட்.எம் ஸாஜீத் குறித்த வழக்கு சம்பந்தமாக மன்றில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam