மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் விற்பனை (Photos)
மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த ஹோட்டல்கள், பேக்கரிகள் சுகாதார அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட பிரதேசத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்கள் நேற்று (03.03.2023) வெள்ளிக்கிழமை சுகாதார அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பாவனைக்குதவாத உணவுகள்
உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள் காணப்பட்ட சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களின் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பல உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது நான்கு வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ச.எம்.மாதவன் தலைமையில் அவரது வழிகாட்டலில் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நீதவான் நீதிமன்றம்
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மூவருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஒரு வர்த்தகருக்கு 5000 ரூபாயும் அபராதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலினால் அறவிடப்பட்டது.
பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் நீதவானின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
