இலங்கையை விட்டு வெளியேறும் இலட்சக்கணக்கான புத்திஜீவிகள் - காரணம் என்ன?
இலங்கையில் இருந்து பெருமளவான அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்வதற்கு மாத்திரம் 2 இலட்சத்திற்கு அதிக தொழில்வல்லுநர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக வேறு நாடுகளுக்கு செல்வதற்காகவும் பாரிய அளவிலானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து தங்கள் நாட்டுக்கு சேவை செய்ய ஏற்ற சூழல் இல்லை என்ற காரணத்திலேயே புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
“அரசியல்வாதிகள் நாட்டின் புத்திஜீவிகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் முதுகெலும்பு உள்ள புத்திஜீவிகள் நாட்டில் நிலைத்திருப்பார்களா?” என வல்லுநர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam