எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் மே மாதத்தில் அதிகரிப்பு
இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவினம் மே 2026இல் ஆண்டு அடிப்படையில் 112வீதம் அதிகரித்து 536 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் சமீபத்திய வெளிவாரித்துறை செயல்திறன் அறிக்கையின்படி, மே 2025இல் 252.8 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் மே மாத எரிபொருள் செலவினம் 112வீதம் அதிகரித்துள்ளது.
பெட்ரோலிய இறக்குமதிச் செலவு
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி செலவினம் அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2025 மே மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவு 197.2 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அதே சமயம் 2026 மே மாதத்தில் அது 418.7 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு 2025 மே மாதத்தில் 55.5 மில்லியன் டொலரிலிருந்து 2026 மே மாதத்தில் 94.9 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது 70.9 சதவிகித அதிகரிப்பாகும்.
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில்
நிலக்கரி இறக்குமதிச் செலவும் 2025இல் 0.1 மில்லியன் டொலரிலிருந்து 2026-ல் 22.4 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. சதவிகித அடிப்படையில் இவற்றுக்கிடையிலான வேறுபாடு 30,220வீதம் என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 2,703.7 மில்லியன் டொலராக இருந்தது. அதே சமயம் 2025இல் இதே காலகட்டத்தில் அது 1,664.2 மில்லியன் டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இது 62.5 சதவிகித அதிகரிப்பைக் காட்டுகிறது. இருப்பினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதி செலவினம் 39.5 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம்: ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை - கடுமையாக சாடும் ஜோசப் ஸ்டாலின்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan