தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பு: டக்ளஸ் தேவானந்தா
வட கடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன், வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு - லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்காலிகமாக, 5 பணியாளர்களைக் கொண்ட குழுவுக்கான விபரங்கள், அதனூடாக, தொழிற்சாலை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இதன்போது தோல்வி அடைந்த அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது தொடர்பாக, ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

எனவே கடந்த கால அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாட்டினால், பின்னடைவை சந்தித்துள்ள வட கடல் நிறுவனத்தையும், அந்த நிறுவனத்தின் பணியாளர்களையும் பங்குதாரர்களாக கொண்டு, தனியார் முதலீட்டாளர்களை உள்ளீர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லுணுவல வலை உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்கள்
அதேவேளை, கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமை தொடர்பில், வட கடல் நிறுவனத்தின் லுணுவல வலை உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து எடுத்துரைத்துள்ளனர்.
அவற்றை புரிந்து கொண்ட கடற்தொழில் அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன்
கலந்துரையாடி, உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam