சுவிற்சர்லாந்தில் கோடைக்காலத்தில் மாற்றம் எதிர்பார்க்கலாம்

சுவிற்சர்லாந்தின் நடுவனரசு 28. 04. 21 புதன்கிழமை தமது மகுடநுண்ணி (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கையின் தளர்வு தொடர்பாக புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் அறிவித்தது.

சுவிஸ் நாட்டின் அதிபர் குய் பார்மெலின் தனது உரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பினை தொடங்கினார்.

“மகுடநுண்ணித் தொற்றுச் சூழலை சுவிஸ் அரசு எதிர்காலத்தில் எவ்வாறு கையாள வேண்டும் எனும் செறிவான எண்ணம் கொண்டுள்ளது. தற்போது சுவிசின் சூழல் திடமாக இருப்பினும் உலகப்பொதுச்சூழல், குறிப்பாக இந்தியாவில் தற்போது உள்ள திரிவடைந்த தொற்று நுண்ணி எமக்கு எச்சரிக்கை உணர்வினை அளிக்கின்றது”.

நிகழ்வுகள்

எதிர்காலத்தில் நிகழ்வுகளுக்கு காப்பமைவுத் திட்டங்கள் இருக்கவேண்டும். நோய்த்தொற்று சூழல் காரணமாக நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டால் ஏற்படும் காப்பற்ற செலவுகளில் நடுவனரசு, மாநில அரசு பங்கெடுக்கும்.

இவ்விதியானது 01. 06. 2021 முதல் 30. 04. 2022 வரை முதற்கட்டமாகச் செல்லுபடியாகும். இதனை நடைமுறைப்படுத்த ஏதுவான சட்டவரைவுகளை மாநில அரசுகள் ஆக்க வேண்டும். இவ்விதி 10.05.21 வரை மாநில அரசுகளின் பரிசீலனைக்கு அறிவுரை பெறுதலிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் அலான் பெர்சே தெரிவிக்கையில் கோடை 2021 முதல் பெரு நிகழ்வுளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா என்பது நோய்த்தொற்றுச் சூழலும், மாநிலங்கள் அறிவிக்க உள்ள வரையறைகளையும் கொண்டே பதிலளிக்க முடியும் என்றார்.

இது தொடர்பான தெளிவான பதிலைத் தாம் ஆடவைத்திங்கள் (யூனி 2021) நிறைவில் அறிவிக்க உள்ளதாகச் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

கோடை 2021

பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி இடுவது ஊடாகவும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் நற்பேறுகளாலும் கோடை 2021 காலத்தில் மீண்டும் பெருநிகழ்வுகள் நடைபெற ஒப்புதல் வழங்கும் வாய்ப்பு அமையலாம்.

நிகழ்வுகளுக்கு காப்பமைவு கட்டாயமாகும். நிகழ்வில் பங்கெடுப்போர் மகுடநுண்ணித் தொற்று அற்றவர் அல்லது தடுப்பூசி இட்டவர் எனும் சான்றினைக் கொண்டிருக்க வேண்டும்.

மிகுபெரும் நிகழ்வுகள் தொற்றுப்பரவல் காரணமாக நடைபெறமுடியாது போனால் அதன் செலவுகளை எதிர்கொள்ளப் பாதுகாப்புக் குடையாகக் காப்பு அமைக்க சுவிஸ் அரசு திட்டத்தை ஆய்வுசெய்து வருகின்றது.

விடைத்திங்கள் (மே 2021) நிறைவில் கடகத்திங்கள் (யூலி 2021) முதல் 3000 ஆட்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு உரிய வரையறையுடன் மற்றும் நோய்த்தொற்றுச் சூழலிற்கு ஏற்ப ஒப்புதல் (அனுமதி) வழங்கலாம். மடங்கற்திங்கள் (செப்டெம்பர் 2021) முதல் பெருநிகழ்வுகளில் பங்கெடுக்கும் ஆட்களின் தொகை 10 000 ஆயிரமாக உயர்த்தப்படலாம்.

தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள், தொற்றுச்சோதனை செய்தோர், நலம் அடைந்தோர்

பெரும் நிகழ்வுகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு அமைந்தாலும் அதன்போது நிகழ்வில் பங்கெடுப்போர் மேற்கண்ட நிரலிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும். மேலும் பல்கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டி இருக்கும்.

பெரு நிகழ்விற்கான காப்பமைவினை தேர்வாய்வு செய்து பார்க்க ஆடவைத்திங்கள் முதல் (யூனி 2021) முன்னோட்ட நிகழ்வாகக் குறைந்தது 300 முதல் கூடியது 600 மக்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு ஒப்புதல் அளிக்க சுவிஸ் அரசு மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கின்றது.

இவ்வாறான மேலே குறிப்பிட்ட மக்கள் மட்டும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதை காப்பமைவு முறைமையால் உறுதி செய்ய முடியுமா என்பதும் இதனூடாக கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.

அறுதித்தீர்மானம் 26. 05. 21 அறிவிக்கப்படும்

இம்முன்னறிவிப்புக்கள் மாநில அரசுகள் தமது முடிவுகளை எட்டுதற்கு உதவியாக சுவிற்சர்லாந்து நடுவனரசால் இன்று அறிவிக்கப்படுக்கின்றது. முடக்கத்தைத் தளர்த்துவதற்கான திட்டம் எதிர்வரும் நாட்களில் நிலவும் சூழல் மற்றும் பட்டறிவுகொண்டு எடுக்கப்படும். 26. 05. 2021 சுவிஸ் நடுவனரசு பெருநிகழ்வுகள் நடத்துவதற்கு அளிக்கப்படும் ஒப்புதல் தொடர்பான அறுதி முடிவினை அறிவிக்கும்.

கோடைக்கால நிறைவுக்குள் சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் ஒரேமாதிரியான மகுடநுண்ணி (கோவிட்) சான்றிதழ் வழங்கப்படும். அச்சான்று கண்காணிப்பினை இலகுபடுத்தும் என நம்பப்படுகின்றது.

காப்புக்குடைக்கு முன்மொழிவு

1000 ஆட்களுக்கு மேற்பட்டு மாநிலம் தாண்டி நடைபெறும் பெருநிகழ்வு திட்டமிடப்பட்டு, அந்நிகழ்வு தொற்றுச்சூழல் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டால் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு உரிய ஈடுவழங்க திட்டமிடப்படுகின்றது. சுவிஸ் நடுவனரசு மற்றும் மாநில அரசுகள் இவ் ஈடுவழங்கும் காப்புக்குடைத் திட்டத்தில் பங்கெடுக்கும். இவ்விதிக்கான முன்வரைவு கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது முன்மொழியப்பட்ட விதியாகும்.

எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்விற்கு பெருநிகழ்வின் ஏற்பாட்டாளர் தனது முகமைப்பங்காக 30 000 ஆயிரம்பிராங்வரையான செலவினைப் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும். தானிழந்த தொகையில் 30 ஆயிரத்தைக் கழித்துக்கொண்டு மிகுதி இருக்கும் இழப்புத் தொகையில் 20வீதத்தையும் நிகழ்வு ஏற்பாட்டாளரே ஏற்கவேண்டும். மிகுதியை மேற்கண்ட காப்புறுதித்திட்டம் ஈடுசெய்யும்.

நடுவனரசு மற்றும் மாநில அரசு ஒரு நிகழ்விற்கு ஆகக்கூடியது 5 மில்லியன் சுவிஸ் பிராங் வரை ஈடுவழங்கும். இவ்விதி 01.06.21 முதல் 30.04.22 வரை செல்லுபடியாகும்.

மாநிலங்கள், நகரங்கள், ஊராட்சிமன்றங்கள், கூரையமைப்புக்கள், ஒன்றியங்கள், சமூகப்பங்காளர்கள், சமயங்களின் சபை மற்றும் நாடாளுமன்ற குழுக்கள் என்பன இவ்விதி தொடர்பான தமது முன்மொழிவுகளை சுவிஸ் அரசிற்கு 10.05.21 வரை அளிக்க முடியும். இவர்களின் முன்மொழிவுகளை அரசு கவனத்தில் கொள்ளும். 

தொகுப்பு: சிவமகிழி 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஈழவன் பிரபாகரன்

Hildesheim , Germany

மரண அறிவித்தல்

திருமதி நோனாம்பிகை சிவயோகநாதன்

மானிப்பாய் மேற்கு, Sri Lanka

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு தர்மலிங்கம் முருகேசு

பூநகரி, Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி செபமாலைஅம்மா சந்தியாப்பிள்ளை

முல்லைத்தீவு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை

தாவடி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கெஜஞானவதி இராஜசிங்கம்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி கனகாம்பிகை சிவமூர்த்தி

மீசாலை, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தையல்நாயகி கந்தையா

வதிரி, Sri Lanka

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சகிர்தா பிரதீஸ்

புதுக்குடியிருப்பு, Sri Lanka

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி இராசையா

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இந்திராணி ஆறுமுகம்

கலட்டி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சரோஜினி வரதராஜா

நல்லூர், Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு அப்பையா சந்திரசேகரம்

இருபாலை, Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு புனிதராசா குகதீபன்

வல்வெட்டித்துறை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா சிவசம்பு

வட்டுக்கோட்டை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தம்பு ஈஸ்வரலிங்கம்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி பராசக்தி நாகலிங்கம்

நல்லூர், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி வென்சிலாஸ் மேரியம்மா

நாவாந்துறை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தம்பிமுத்து நடராஜா

Kokuvil, Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஹரிதாஸ் வேலாயுதப்பிள்ளை

மானிப்பாய், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சுதாகரன் தனபாலசிங்கம்

கொட்டடி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி சுப்ரமணியம்

பண்ணாகம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு முருகேசு சேதுராஜா

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் ஜெயபாலன்

சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பிலிப்பையா நீக்கிலஸ்

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை

பண்டத்தரிப்பு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு இராஜசிங்கம் நிசாந்தன்

கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கனகேஸ்வரி சுப்பிரமணியம்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்

நெடுந்தீவு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி திருநாவுக்கரசு மங்களாதேவி

வதிரி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு மோகனதாஸ் சோதிலிங்கம்

கோப்பாய், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு அருணாசலம் சேனாதிராஜா

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம்

சுழிபுரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி விக்னராஜா

நல்லூர், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ்

மிருசுவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நவரட்ணம் அனுவலோகன்

பூநகரி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு இலகுநாதன் பொன்னம்பலம்

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தனபாலசிங்கம் குமாரசாமி

மலேசியா, Malaysia

மரண அறிவித்தல்

திருமதி சாரதாம்பாள் நுட்பநாதன்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி செல்லத்தம்பி அமிர்தமலர்

இலங்கை, Sri Lanka

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US