உடன் வெளியேறுங்கள்! சுதந்திரக் கட்சிக்கு அமைச்சர் பதிலடி
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன (S M.Chandrasena) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் எமக்கு நன்மை பயக்கவில்லை. மொட்டு கட்சியால்தான் சுதந்திரக் கட்சி பயன் அடைந்தது. எம்முடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் 14 ஆசனங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு இல்லாவிட்டால் ஒருவர்கூட வெற்றிபெற்றிருக்க முடியாது.
சுதந்திரக் கட்சி தனக்கான நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே,
இருக்க முடியாவிட்டால், உள்ளுக்குள் இருந்து விமர்சனங்களை
முன்வைத்துக்கொண்டிருக்காது, வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri