படுதோல்வியை சந்திக்கும் விஜய்..! மீண்டும் தமிழ்நாட்டின் ஆட்சி திமுக வசம் - இறுதிக் கருத்துக் கணிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சி அமைக்கவுள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வெளியாகவுள்ளன.
இந்தநிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் இன்று வெளியாகியுள்ளன.
ஆட்சியில் திமுக
பெரும்பாலான கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியமைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, 43.1 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் ஸ்டாலின் தரப்பு ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக கருத்துக்கணிப்புக்களின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அதிமுக கட்சி 34.8 சதவீத வாக்குகளையும், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி 15.1 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொள்ளும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.
234 மொத்த தொகுதிகளில், திமுக கூட்டணி சராசரியாக 125 - 145 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடும் என்றும், அதிமுக கூட்டணி சராசரியாக 65 - 80 இடங்கள் வரை கைப்பற்றக் கூடும் என்றும், தவெக 18 - 24 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி 2 - 6 வரையிலான தொகுதிகளைக் கைப்பற்றலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் வெளியான ஆய்வு
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri