ஆவா குழுவை அடக்க முடியாவிட்டால் வெளியேறுங்கள்! பாதுகாப்பு தரப்புக்கு எம்.கே சிவாஜிலிங்கம் சவால்

Srilanka Jaffna MK Sivajilingam
By Independent Writer Jul 13, 2021 07:32 PM GMT
Report

ஆவா வாள்வெட்டுக் குழுவை பாதுகாப்பு தரப்பினரால் அடக்க முடியாவிட்டால் தமிழர் பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.

இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் >

யாழ் .மாவட்டத்தைப் பொருத்தவரை வாள்வெட்டு கலாச்சாரம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. அதிக அளவிலான பாதுகாப்பு தரப்பினர் இங்கு நிலைகொண்டுள்ள நிலையில் எவ்வாறு வாள் வெட்டு கும்பல்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவு செய்தோம் என மார்தட்டிக் கள்ளும் இலங்கை பாதுகாப்பு தரப்புசமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் திரண்டு எழும்போது கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை காரணங்கட்டி நீதி கேட்பவர்களை கைது செய்யும் செயற்பாடுகள் அண்மையில் அரங்கேறியுள்ளது.

தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவியேற்ற போது வெடி கொளுத்தி கொண்டாடியவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் கிடையாது பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் .

அதேபோல் யாழ்ப்பாணத்திறகு விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பங்கு வடமராட்சியில் பங்குபற்றிய நிகழ்வுக்கு சுமார் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் குறித்த நிகழ்வில் 300க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதுடன் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசாங்கமானது தனக்கு ஏற்ற முறையில் சட்டங்களை செயற்படுத்தி வருகின்ற நிலையில் சர்வதேச சமூகம் உற்று நோக்கி வருகிறது. சுமார் 700 மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வருவதற்கு திண்டாடி வருகிறது.

ஆகவே சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது என நினைத்து இலங்கை அரசாங்கம் எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என நினைப்பது பூனை கண்ணை மூடி பால் குடித்தால் யாருக்கும் தெரியாது என நினைப்பதற்கு ஒப்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.  

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US