கல்வியிலும் விளையாட்டிலும் பிரகாசித்து முன்மாதிரியாக திகழும் மாணவர்
விளையாட்டு ஒரு போதும் கல்விக்கு தடையில்லை என்பதை ஒரு சில மாணவர்கள் நிரூபித்து காட்டுகின்றனர்.
அத்தகைய ஒருவர் தான் சஜித் விதானகே. நாலந்தா கல்லூரியின் 19 வயதுக்குற்பட்ட அணியின் தலைவராக செயற்பட்ட இவர் ஆனந்தா கல்லூரிக்கு எதிரான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
இந்நிலையில் இவர் விளையாட்டு துறையில் மட்டுமல்ல கல்வியிலும் சாதிக்க முடியுமென நேற்று முன்தினம் வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.

உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் தோற்றிய இவர் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்வி, விளையாட்டு, தலைமைத்துவம் என சகல அம்சங்களிலும் சிறந்து விளங்கும் சஜித் விதானகே அடுத்து வரும் சந்ததியினருக்கு முன் உதாரணமாக விளங்குகிறார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam