நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்:டக்ளஸ்
நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நப்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பருத்திதுறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்பின்னர் ஊடகங்குக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், காலத்துக்கு காலம் அரசியல் காரணங்களுக்காக விவாதிக்கப்படும் விடயங்களுள் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி விடயமும் ஒன்று.
இதேநேரம் தமிழரது தரப்பை எடுத்தக்கொண்டால் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்ட வேளையில் அதை வரவேற்றார்கள். அதன்பின்னர் அது தேவை இல்லை என இன்னொரு தரப்பு கூறியபோதும் அதையும் வரவேற்றுள்ள நிலைமைதான் இருக்கின்றது.
ஆனால் இன்று நாடு இருக்கின்ற ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரத்திற்குரிய அவசியம் இருப்பதாகவே தெரிகின்றது.
காரணம் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஊடாகத்தான் நாம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என நான் நம்பகின்றேன்.
இதேநேரம் நிறைவேற்று அதிகாரம் என்பது உலகின் வேறு பல நாடுகளிலும் இருக்கின்ற ஒரு விடயம்தான். இருந்தபோதும் நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்பட வேண்டும் என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டுள்ளேன்.
மேலும் நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொது வெளியிலும் கூறிவந்திருகின்றேன்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
அதேநேரம் தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை.
இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயலற்றுக் கிடந்த நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் முடியுமானவரை சீர்செய்து ஓடச் செய்துள்ளார். அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்ச்சி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வையே கொண்டுள்ளோம்.
குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் என நாம் பல தசாப்தங்களாகக் கூறிவந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
