நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யக் கூடாது
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யக் கூடாது என சட்டக்கல்லூரியின் அதிபர் பிரசன்ன லால் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு இன சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணவும் வெளிநாட்டு தலையீடுகளை தடுக்கவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை எவ்வித திட்டமிடலும் இன்றி திடீரென நீக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போன்று முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கு சட்டம் கொண்டு வரப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரசன்ன லால் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
