அரசாங்கம் வியாபாரிகளின் தேவைக்கு அமைய வேலை செய்கிறது! துஷான் குணவர்தன
தற்போது சௌபாக்கிய நோக்கு எதுவுமில்லை எனவும் அரசாங்கம் வியாபாரிகளின் தேவைக்கு அமைய வேலை செய்வதாகவும் நுகர்வோர் சேவை அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு எதிராக பணியாற்றியதால், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பாதகமான உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தான் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை மறுத்ததாகவும் தேவையானால் அமைச்சரை கையெழுத்திடுமாறு கூறியதாகவும் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இணையத்தள வலையெளி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விரைவில் பால் மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தயாராகி வருகின்றனர்.
சதோச நிறுவனம் இதற்கு முன்னரும் பெருந்தொகையான பொருட்களை எடுத்துச் சென்றது. சதோச நிறுவனம் வெள்ளை பூண்டுகளை கொண்டு சென்று அவற்றை மீண்டும் வர்த்தகர்களிடம் கொடுத்து அவர்களிடம் இருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்தது.
இப்படியான கொள்ளைகளை நிறுத்த முடியாது. மனதுக்கு இணங்க தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் துஷார குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
