இலங்கை தொடர்பில் ஆராய உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, எதிர்வரும் வாரங்களில் கூடி, இலங்கை தொடர்பில் ஆராயவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும், இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது குறித்து இதன்போது தீர்மானிக்கப்படும் என்று நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
வோசிங்டனில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது மதிப்பாய்வு
இந்தநிலையில், இலங்கையில், மின்சார செலவு-மீட்பு விலையை மீட்டெடுப்பது மற்றும் மின்சார விலை சரிசெய்தல் பொறிமுறை ஆகியன, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு முக்கியமான நிபந்தனைகளாகும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, 2025 ஏப்ரல் 25 அன்று நாட்டின் பொருளாதாரத் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின்; பணியாளர் நிலை ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதன்படி, இந்த ஒப்பந்தம் முறையாக அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை அதன் தற்போதைய ஏற்பாட்டின் கீழ், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 334 மில்லியன்; டொலர்களை பெற்றுக்கொள்ளும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
