கோவிட் சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்று அஞ்சலி மேற்கொண்ட மக்கள்! கிளிநொச்சியில் பரபரப்பு

Covid-19 Kilinochchi Vavuniya Covid death Tribute
By Sudaron Sep 20, 2021 03:05 PM GMT
Report

கிளிநொச்சியில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர் கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த கிராமத்தில் அவருடைய இறுதி நிகழ்வுகள் அவரின் வீட்டில் நடைபெறும் என்று ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களாலும் அரச உத்தியோகத்தர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவிட்டால் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட குறித்த மரணம் நிகழ்ந்த வீட்டில், கோவிட்டால் உயிரிழந்தவரின் சடலத்தை மக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கின்றபோது அங்கு செல்கின்ற மக்கள் ஊடாக மீண்டும் கோவிட் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இருந்தபோதிலும் நேற்று (19) காலை 7.00 மணியளவில் அவரின் சடலம் வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் மயானத்திற்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் வாகனம் வவுனியா செல்வதற்குப் பதிலாக உதயநகர் கிழக்கில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று வாகனம் அவர்களின் வீட்டின் உள்ளே சென்றிருக்கின்றது.

அங்கு நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் திரண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகனம் மீளவும் வவுனியாவிற்குச் சென்றிருக்கின்றது. இதனிடையே, கோவிட்டால் உயிரிழப்பவர்களை எரியூட்டும் இடத்தில் கூட மூன்று அல்லது நான்கு பேருக்கு மட்டுமே தூரத்திலிருந்து பார்க்க அனுமதிக்கப்படுவது நடைமுறையாகும்.

அதேபோல சடலத்தை எரியூட்டுபவர்கள் கூட முழுமையாக கோவிட் பரவலைத் தடுக்கும் வகையிலான ஆடைகளை அணிந்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருப்பர். ஆனால் மரணச் சடங்களில் பங்குகொண்ட மக்கள் மாஸ்க் தவிர வேறெந்த பாதுகாப்பினையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் மரணச் சடங்கினை நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் வைத்திய அதிகாரி பிரிவுக்குத் தகவல் வழங்கிய கிராம மட்ட அரச அதிகாரிகள், மரணவீடு நடத்தியவருக்கு நெருங்கிய உறவினர்களில் ஒருவரான அரச உயர் அதிகாரி உட்பட்ட பலரால் தொலைபேசி ஊடாக எச்சரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின், மைத்துனர்கள் மூவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களாக பணியாற்றி வருகின்றனர். உயிரிழந்தவரின் மருமகன் கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

குறித்த மரணச் சடங்கினை வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாட்டில் பிரபல மருத்துவர் ஒருவரும் முன்னின்று செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மரணச் சடங்கு குறித்த தகவலை வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு வழங்கியவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடிந்துகொண்டமை தொடர்பிலான ஆதாரங்களும் ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

கோவிட்டின் தொடர் தாக்கத்தால் அதிலிருந்து மீள்வதற்கு மக்களும் நாடும் கடும் சிரமப்பட்டுவரும் நிலையில் உயர் பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்கின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US