கண்டியில் வர்த்தகர் ஒருவரினால் ஏற்பட்ட பரபரப்பு
கண்டி கட்டுகஸ்தோட்டையில் கட்டடம் ஒன்று கொள்வனவு செய்த உரிமையாளரால் உடைத்து நொருக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
பணம் கொடுக்கல், வாங்கல்களை அடிப்படையாக கொண்டு கட்டடத்தின் உரிமையாளர் உட்பட குழுவினர் கட்டடத்தின் கீழ் மாடியில் தங்கியிருந்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்ட தூய அந்தோனி பாடசாலைக்கு அருகில் உள்ள இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் இன்னும் ஒரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் தொடர்பில் வர்த்தகர் உட்பட 13 பேர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தக கட்டடத்தொகுதி தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது மூவர் காயமடைந்து கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கட்டடத்தின் உரிமையாளர் தரப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் டிபெண்டர் வாகனம் மற்றும் மற்றுமொரு வாகனத்தில் நேற்று அதிகாலை அவ்விடத்திற்கு வந்து கீழ் மாடியில் இருந்தவர்களுடன் மோதல் ஏற்படுத்தியுள்ளார்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் உரிமையாளர் தரப்பினரால் கட்டடம் உடைக்கப்பட்டுள்ளதுடன் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
