கலால் திணைக்களத்தின் அறிவிப்பு: மதுபிரியர்களுக்கு சோகமான செய்தி
வரவிருக்கும் நத்தார் பண்டிகையின் போது விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிட வசதிகள் கொண்ட விடுதிகளிலுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே குறித்த தினத்தில் மதுபானம் வழங்குவதற்குக் கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இத்தினத்தில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும் அது தொடர்பாக இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களோ, தீர்மானங்களோ எடுக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
