மத்திய வங்கி ஆளுநர் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கை மத்திய வங்கிக்கு அந்நிய செலாவணியை விற்க வேண்டிய தேவையை வங்கிகள் 50 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.
மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மத்திய வங்கிக்கு அந்நிய செலாவணியை விற்க வேண்டிய தேவையை வங்கிகள் 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்நிய செலாவணியை விற்க வேண்டிய தேவை நேற்று (12ம் திகதி) முதல் மீண்டும் 50 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கிகளின் அந்நியச் செலாவணி கையிருப்பில் மீதமுள்ள 25 சதவீதத்தை பொது மற்றும் பிற அத்தியாவசிய அந்நியச் செலாவணி தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எனவே அத்தியாவசிய அந்நிய செலாவணி தேவைகளுக்காக கறுப்பு சந்தைக்கு செல்லாமல் வங்கிகளுக்கு செல்லுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri