டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் - அமெரிக்க நிபுணர் வெளியிட்ட தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் அடிப்படையில் இலங்கை உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கேவின் தரவு அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரூபாவின் பெறுமதி

இந்த அறிக்கைக்கமைய, ஜிம்பாப்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜிம்பாப்வே நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது 73.33 சதவீதம் குறைந்துள்ளது.
நாணயத்தின் பெறுமதி 57.65 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கியூபா இரண்டாவது இடத்திலும், இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இலங்கை ரூபாயின் மதிப்பு 47.79 சதவீதம் சரிந்ததே இதற்குக் காரணம் என பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கேவின் தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri