இலங்கையின் அதீத பாதுகாப்பு செலவீனங்களும் அதன் பொருளாதார நெருக்கடியும் (PHOTOS)

Srilanka Sri Lanka Economic Crisis
By Dhayani Apr 12, 2022 11:19 PM GMT
Report

இலங்கையின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும், தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகின்றது.  

அதற்கமைய,போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன் விரயமாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு செலவு US $34.7 -> US $200 பில்லியன், வெளிநாட்டுக் கடன் US $50.7 பில்லியன் ஆகும்.

யுத்தம் முடிந்த பின்னும் அதிகரிக்கும் இராணுவ ஆளணி (223.000 -> 317,000),பாதுகாப்புச் செலவிற்கான நடப்பு வருட ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தின் 15% (சுமார் US $2 பில்லியன்,19 இல் 16 படை பிரிவுகள் வட மாகாணத்தில் நிலைநிறுத்தம் ஆகும்.

மே 2009இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதிலும், சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதை தேர்ச்சி பெற்ற பொருளாதார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட ஆய்வுத் தகவல்கள் நிரூபிக்கின்றன.

மேக்ரோ ட்ரெண்ட்ஸ் அறிக்கையின்படி, (முதலீட்டாளர்களுக்கான ஆராய்ச்சி தளம்) 1960ஆம் ஆண்டு முதல் சிறிலங்காவின் பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டச் செலவுகள் பின்வருமாறு: 

காலம்

மொத்தம்

US$ Billion

ஆண்டு சராசரி

US$ Billion

1960 to 1982

0.52 0.023

1983 to 2009

14.92 0.553

2010 to 2019 (போரின் பின்)

17.28 1.728 மொத்தம் 32.72

2020ஆம் ஆண்டு வரை சிறிலங்கா தனது பாதுகாப்புக்காக US$34.7 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன்படி 2020 ஆம் ஆண்டு பாதுகாப்புக்காக மட்டும் US$1.58 பில்லியன் டொலர்களை இலங்கை செலவிட்டுள்ளது.

போருக்குப் பிந்தைய கால வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு செலவு (US$ 17.28 பில்லியன்) போர் கால பாதுகாப்பு செலவை விட (US$14.92 பில்லியன்) அதிகமாக உள்ளது.

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவு செயலாளருமான சிவசங்கர் மேனனின் அறிக்கையில்,மே 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டுப் போரால் நாட்டிற்கு சுமார் US$200 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பதை கருத்தில் கொள்வது பயனுள்ளது ஆகும்.

இந்த US$200 பில்லியன் டாலர்கள் மிகப் பெரியது மட்டுமன்றி சிறிலங்காவின் பதிவுகளில் கணக்கில் காட்டப்படவில்லை. மேலும், மேலே மேற்கோள் காட்டப்பட்ட பாதுகாப்பு செலவின் புள்ளிவிபரங்களில் சர்வதேச சமூகங்களால் இலவசமாக வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் படைக்கலன்கள் ஆகியவை உள்ளடக்கப்படவில்லை. 

இலங்கை இராணுவத்தினர் தொகை பின்வருமாறு:

வருடம்

மொத்தம்

1985

21,600

2009 (போர் முடிவில்)

223,000

2018

317,000

மேற்கூறிய விபரங்களிலிருந்து, 2009 இல் போர் முடிவடைந்த பின்னரும், சிறிலங்காவில் இராணுவத்தை அதிகரிப்பதில் தனது வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையைச் செலவழித்து வருகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.

நடப்பு ஆண்டு மொத்த வரவு செலவுத் திட்டத்தின் 15%ஐ அதாவது சுமார் US$2 பில்லியன் டாலர்களை பாதுகாப்புச் செலவிற்காக ஒதுக்கியுள்ளது. இராணுவத்தினர் தொகையை 2009ல் போர் முடிவடையும் கட்டத்தில் 223,000 பேரிலிருந்து இன்றுவரை 317,000 ஆக (94,000 பேரால்) அதிகரித்தது.

இது 2009 இல் நடந்த போருக்குப் பிறகு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் இராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது.

இதற்கிடையில், சிறிலங்காவின் சமாதானம் மற்றும் நீதிக்கான பிரச்சாரக் குழு, (Sri Lanka Campaign for Peace & Justice) அதன் 06 மார்ச் 2013 அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரங்களை வழங்கியது.

மேற்குறிப்பிட்ட அறிக்கையானது, வடக்கில் மாத்திரம், யுத்தத்தின் முடிவில் 200,000 படையினர் இருந்ததாகவும், 2012 இல் 300,000 ஆகவும், 2015 ஆம் ஆண்டளவில் 400,000 படையினரை நிலை கொள்ள வைக்க கணிப்பிடப்பட்டது..

இக்கணிப்பீடானது, சிறிலங்கா அரசாங்கம், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து தற்காலிக வாழ்விடங்களுக்கு விரட்டி ஏழ்மை நிலைக்கு தள்ளி விட்டு, அங்கு ஏறக்குறைய தனது அனைத்து இராணுவத்தினரையும் நிலைநிறுத்தி வருவதைக் குறிக்கிறது.

ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வரை 30 வருட உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்காக நில அபகரிப்பினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இடர் பகுப்பாய்வுகளை மேற்கொள்வது, ஊழல்கள் மீதான தணிக்கை போன்ற நடைமுறைகளை மேற்கொண்டு சிறிலங்கா தனது பாதுகாப்பு செலவினங்களை வீணாக்காமல் இருந்திருந்தால், US$50.7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஓரளவு தணித்திருக்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.

சிறிலங்காவின் அரசியல்வாதிகள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் எவ்வாறு சொத்து சேர்த்தார்கள் என்று கேள்வி எழுப்புவதன் மூலம், பாதுகாப்புக் கொள்வனவுகள் மட்டுமன்றி உரக் கொடுக்கல் வாங்கல்கள், 2004 சுனாமி நன்கொடைகள் மற்றும் எண்ணெய்க் கசிவுகளுக்காக வழங்கப்பட்ட நஷ்டஈடு போன்றவற்றிற்கான நிதி ஆய்வை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

மேற்கூறிய காரணிகளை ஆராயும் அதே வேளை, பின்வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால கொள்கைகளை மீளாய்வு செய்தல் முன்னேற்றத்துக்கான ஆக்கபூர்வமான வழியாகும்.

கொள்கை நெருக்கடி ,பொருளாதார நெருக்கடி, மற்றும் - அரசியல் நெருக்கடி

சிறிலங்காவின் தற்போதைய அவலநிலை குறித்து சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பது அத்தியவசியமாகும்.

அதே வேளையில், நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துவது என்னவென்றால் சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் அளவை குறைப்பதற்கு சிறிலங்காவின் மேல் அழுத்தங்களை கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற் கொண்டு தமிழ் மக்கள் மீதான இராணுவ நெருக்கடிகளை நீக்குவதுடன் இராணுவமயமாக்கலை முற்றாக நிறுத்துவதன் மூலம் அதிகரித்த தேசிய செலவினத்தை குறைப்பதே முதல் மற்றும் முதன்மையான நடவடிக்கையாகும்.

அதே வேளையில், நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துவது என்னவென்றால் சிறிலங்காவின் மேல் அழுத்தங்களை கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற் கொண்டு சிறிலங்காவின் வடக்கு,கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்களை முழுமையாக நீக்குவதுடன் சிறிலங்காவின் தேவையற்ற யுத்தசன்னதத்தை குறைப்பதன் மூலம் அநாவசியமான தேசிய செலவினத்தை ஒழிப்பது முதன்மையான நடவடிக்கையாகும்.

1.https://www.macrotrends.net/countries/LKA/sri-lanka/military-spending-defense-budget

2.https://www.macrotrends.net/countries/LKA/sri-lanka/military-army-size

3.https://www.ips.lk/wp-content/uploads/2017/01/The-Economic-Cost-of-the-War-in-SL-Copy.pdf

4.https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.CD?locations=LK

5.https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.GD.ZS?locations=LK

6.https://data.worldbank.org/indicator/MS.MIL.TOTL.P1?locations=LK

7.https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.CN?locations=LK

8.https://data.worldbank.org/indicator/MS.MIL.MPRT.KD?locations=LK

9.https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.CD?locations=LK

10.https://sangam.org/sri-lankas-north-military-occupation

11.https://www.newindianexpress.com/world/2016/dec/13/sri-lankas-internal-war-cost-us-200-billion-1548433.html

12.https://tradingeconomics.com/sri-lanka/external-debt 



GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு, Cergy, France

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US