கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் (Photos)
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இன்றைய தினம் (11.09.2023) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.

குறித்த னிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06.09.2023) ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வு பணிகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri