செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இன்று(27.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்
இந்நிலையில், மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , புதைகுழிக்குள் மழை வெள்ளமும் நிறைந்து காணப்பட்டது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு , செப்டெம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது சுமார் 08 மாத கால பகுதிக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி, நிதியமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யும் நடவடிக்கை
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், அகழ்வு பணிகளை முன்னெடுக்க ஏதுவாக புதைகுழி பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் நாளான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan