அரசடித்தீவு பாடசாலையில் மாணவர்கள் 3A சித்திகளுடன் முதன்நிலை பெற்று சாதனை
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் கலைப்பிரிவில் 100% சித்தியை பெற்று முதன்நிலையை பெற்றுள்ளது.
இந்நிலையில்,பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மூன்று மாணவர்கள் 3A சித்திகளை பெற்றுள்ளனர். ஆறு மாணவர்கள் 100க்கும் குறைவான மாவட்ட வெட்டுப்புள்ளியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்,2020 ஆண்டுக்கான க.பொ. த உயர்தர பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 362,824 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.
இதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை https://doenets.lk/examresults என்ற இணையத்தளம் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
